Vettri

Breaking News

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன




 தென்னஞ்செய்கை உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

அத்தோடு,5,600 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  05 ஏக்கருக்கும் குறைவான தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெட்ரிக் தொன் உரம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.


No comments