Vettri

Breaking News

நிந்தவூர் வைத்தியசாலை மற்றும் கல்முனை சந்தாண்கேணி மைதானம்!!




 பாறுக் ஷிஹான்


கடந்த ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிந்தவூர்  வைத்தியசாலை மற்றும் கல்முனை சந்தாண்கேணி  மைதானம்  ஆகியவற்றை  ஆதம்பாவா எம் பி பார்வையிட்டார்.

கடந்த அரசாங்க காலத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு  கைவிடப்பட்ட நிலையில் காடு மண்டிக் கிடக்கும் சிறுவர் மற்றும் மகப்பேறு வைத்தியசாலைக்குரிய கட்டிடம் மற்றும் கல்முனை பகுதியில் உள்ள சந்தாண்கேணி  மைதானம் உள்ளிட்ட பகுதிகளின் குறைபாடுகள்  தற்போதைய நிலைமை குறித்து  தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ .ஆதம்பாவா செவ்வாய்க்கிழமை(5) ஆராய்ந்தார்.

இதன் போது தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச பிரதான செயற்பாட்டாளர் எம்.எல்.சம்சுன் அலியின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த விஜயத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.







No comments