Vettri

Breaking News

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறித்து வெளியான தகவல்!!




 சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை தற்போது அதிகரித்து வருவதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை வெகுவாக அதிகரிக்கும் எனத் தெரிவித்த அவர், கோழித் தீவன பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments