Vettri

Breaking News

தமிழ்த்தேசியம் பேசுவோர் தமிழ்த் தேசியத்தை சிதைப்பவர்களாக மாறுகிறார்கள்;சுயேச்சையில் களம் இறங்கிய பார்த்தீபன்!!




( வி.ரி.சகாதேவராஜா)

 சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். அம்பாறை தமிழ் மக்களையிட்டு சற்றும் சிந்திக்காதது  கவலைக்குரியது.

 என்று பொத்துவில் பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் உபதவிசாளரும் சுயேச்சை அணியின் தலைமை வேட்பாளரும் தொழில் அதிபருமான பெருமாள் பார்த்தீபன் தெரிவித்தார் .

காலா காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொத்துவில் பிரதேச முக்கிய தூணாக விளங்கிய  பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபனுக்கு இம் முறை உள்ளூராட்சி தேர்தலில் அக் கட்சி சார்பில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர் சுயேச்சையில் களம் இறங்கியுள்ளார்.
அந்த அணிக்கான சின்னம் மாம்பழம் ஆகும்.

சமகால அம்பாறை அரசியல் சூழல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்...


இன்று தமிழ்த்தேசியம் அதல பாதாளத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறது . தலைமைகள் தமக்குள் வேறுபடுகின்றன.அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்ற ஆபத்து இருக்கின்றது.
 மக்களுக்காக கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல.

 எனவே பழையவர்களை தவிர்த்து புது இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். இன்றேல் மக்கள் பெரும்பான்மை கட்சி உடன் சேர்ந்து போக நேரிடும்.

கடந்த முறை செய்த தவறை இம்முறையும் செய்யக்கூடாது.
 மக்கள் மனைநிலை வேறு அரசியல்வாதிகளின் மனநிலை வேறாக இருக்கின்றது.

 எல்லோரும் சேர்ந்து தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் .

மக்களே சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments