Vettri

Breaking News

திருக்கோவிலில் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை ஆரம்பம்!!




( வி.ரி.சகாதேவராஜா)

திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவி ஒன்றின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ளது.

 தம்பிலுவில் கிராமத்தில் முதலாவது தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.

தம்பிலுவில்-3ம் வட்டார வேட்பாளர்  நா.கிருஜன் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தலைமை வேட்பாளர் சு.சசிகுமார் மற்றும் பல வேட்பாளர்களும் உரையாற்றினர்.

 இதில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.




No comments