Vettri

Breaking News

கல்முனை ராமகிருஸ்ண மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு!!




 பாறுக் ஷிஹான்



நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான   பயிற்சி செயல் அமர்வு கல்முனை ராமகிருஸ்ண மகா   வித்தியாலயத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வானது கல்முனை வடக்கு  பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்   அருள் பிரசாந்தன்  ஒருங்கிணைப்பில் அப்பாடசாலையின் அதிபர் திருமதி விஜயசாந்தினி நந்தபாலா   தலைமையில் இன்று  சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு  வளவாளராக அம்பாறை மாவட்ட செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்  எஸ்.றிஸ்மினா  கலந்து கொண்டு பல்வேறு விடயங்களை தெளிவு படுத்தினார்.

 மேலும் இப்பாடசாலையின் பாடசாலை மத்தியஸ்த அலகுற்கு பொறுப்பான ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் இப் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு அது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

இப் பயிற்சி செயலமர்வின் மூலம் மாணவர்களுக்கு முரண்பாடு, தொடர்பாடல், கலந்துரையாடல் போன்ற விடயங்கள் மூலம் மத்தியஸ்தம் செய்யும் முறைகள் தொடர்பாக கூறப்பட்டதுடன் மத்தியஸ்தம் செய்யும் பிரயோகரீதியான அறிவினையும் பெற்றுக் கொண்டனர். மேலும் இப் பாடசாலையில் பாடசாலை மத்தியஸ்த அலகும் நிறுவப்பட்டது.







No comments