Vettri

Breaking News

சாய்ந்தமருதில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை!!!




 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கைகள் (06) முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அண்மையில் வைத்தியசாலை வீதியில் டெங்கு நோயாளியாக  இனங்காணப்பட்டவரின் வீட்டுக்கு களப் பரிசோதனை மேற்கொண்டு அவ்வீட்டின்  சுற்றுச்சூழலை  அவதானித்ததன் பின்னர் அங்கு டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய அபாயம் காணப்பட்டமையினால் அவ்வீட்டின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்ய உத்தேசிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவ் வீதியிலுள்ள 20 வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த டெங்கு தடுப்பு களப்பணிகளில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.







No comments