கல்முனை தாருல் அர்கம் மத்ரஸாவில் இப்தார் நிகழ்வு.!
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனையில் அமைந்துள்ள தாருல் அர்கம் மத்ரஸாவில் இன்று (25) ம் திகதி இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வானது கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந்த தாருல் அர்கம் மத்ரஸாவில் நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு அடிப்படை மார்க்க விடயங்கள் மற்றும் கல்விப் பாடங்கள் என்பன முற்று முழுதாக சிறந்த உலமாக்கள் மூலம் முற்றிலும் இலவசமான கல்விச் சேவையினை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும்.
No comments