Vettri

Breaking News

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது!!




 கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்விஸ் அவனியூ வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து மூன்று பெண்கள் உட்பட நால்வர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பொரள்ளை பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய விபச்சார விடுதிகளின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய, கொழும்பு 4 மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28, 29 மற்றும் 34 வயதுடைய மூன்று பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments