கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் நான்கு தசாப்தம் கடந்த கலை பணியை பாராட்டி கௌரவிப்பு !
நிப்ராஸ் லத்தீப்
கிழக்கு கலை, இலக்கிய செயற்பாடுகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றி வரும் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவை பாராட்டி "கலைமகன்" விருதை அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா வழங்கி கௌரவித்தது.
கல்முனை பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கிய சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றம் தன்னுடைய 11ம் ஆண்டு நிறைவு விழாவை மன்றத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், அதிபருமான யூ.எல். நஸாரின் தலைமையில் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய "கலைச்சுடர் சக்காப் மௌலானா" அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடியது. இதன்போதே கலைஞர் அஸ்வான் ஸக்காப் மௌலானாவின் நான்கு தசாப்தம் கடந்த கலை பணியை பாராட்டி "கலைமகன்" விருதை அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா வழங்கி கௌரவித்தது.
இந்த கௌரவிப்பை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் ஆகியோருடன் இணைந்து அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமர், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை செயலாளர் எம்.வை. அமீர், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை உறுப்பினர் அதிபர் யூ.எல். நஸார், இளைஞர் பிரிவுச் செயலாளர் ஏ.ஜி.எம். அன்வர் ஆகியோர் மேற்கொண்டனர்.
No comments