நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயத்தில் சிரமதானம்!!
செ.துஜியந்தன்
தேசிய மகளிர் வாரத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவினால் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டல் கிராமமட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயத்தில் சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச் சிரமதான நடவடிக்கையில் நற்பிட்டிமுனை கிராமத்திலுள்ள கலைமகள் மற்றும் விநாயகர் அமைப்பின் பெண்கள் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தனலெட்சுமி முரசொலிமாறன், மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் யூ.றமீஸா உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments