Vettri

Breaking News

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற பற்றிமாவின் மாபெரும் இல்ல விளையாட்டு விழா! இமனுவல் இல்லம் முதலிடம்!




 ( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 
 125ஆவது ஆண்டு நிறைவினை  சிறப்பிக்கும் வகையில்  இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று  (6) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது .

 பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் யாவும்  பாடசாலையின் அதிபர் அருட்சகோ.எஸ்.இ.றெஜினோல்ட் FSC  தலைமையில் நடைபெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்எஸ்.சஹதுல் நஜீம்
கலந்து சிறப்பித்தார்.

மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் இமனுவல் இல்லம் முதலிடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது.

டொரதியா இல்லம் இரண்டாம் இடத்தையும், மத்தியூ இல்லம் மூன்றாம் இடத்தையும், மேபில் இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டது .

அணி நடை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் பலரையும் கவர்ந்தன.

போட்டிகள் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக  வடிவமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.













No comments