Vettri

Breaking News

“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” உதயம்!




கிழக்கில் தமிழ் மக்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கருத்திற்கொண்டு பலம் மிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியின் பேறாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு இன்று ஆரம்பிக்கபட்டது.


இதன் முதற்கட்டமாக முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை  மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம் பெற்றது. 


இந்த கூட்டமைப்பின் நோக்கமானது வெறுமனே தேர்தலுக்கான கூட்டாக அல்லாமல், இதனை எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தையும் மக்களையும் நேசிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளையும், சிவில் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து அதனுடாக எதிர்காலத்தில் கிழக்கு தமிழர்களின் அரசியல், சமூக பாதுகாப்பு அரணாக, பலம்பொருந்திய கட்டமைப்பாக முன்னெடுத்து செல்வதாகும். 


இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் தம்பி பூபாலபிள்ளை பிரசாந்தன், முற்போக்கு தமிழர் கழக செயலாளர் யோகநாதன் ரொஸ்மன் உட்பட இரு கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




No comments