உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு
நூருல் ஹுதா உமர்
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு இன்று (21) இடம்பெற்றது.
சாய்ந்தமருது - II பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலுள்ள தபாலக வீதியில் அமைந்துள்ள லீட் த வே முன்பள்ளி மாணவர்களுக்கான வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பாடசாலை பல் சிகிச்சையாளர் கே.வித்யாஷினி அவர்களால் நடாத்தப்பட்டதுடன் பல் துலக்கும் முறை தொடர்பான செயல்முறை விளக்கமும் வழங்கப்பட்டது.
அத்துடன் சிறுவர்களுக்கு பற்தூரிகைகளும் அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன், குடும்ப நல உத்தியோகத்தர் எம்.எல்.நஜீஹா, பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments