Vettri

Breaking News

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழில் டிப்ளோமா பட்டம் பெற்ற பௌத்த துறவி!!




 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌத்த துறவி ஒருவர் தமிழில் டிப்ளோமா பயின்று பட்டம் பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது, சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவி ஒருவர், தமிழில் பட்டப்படிப்பின் தகைமைக் கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பட்டம் பெற்றுள்ளார்.

இந்தக் கற்கை நெறியை உயர் பட்டப்படிப்புகள் பீடம் நடத்தியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவால்  சம்பிரதாயபூர்வமாக இவருக்கு பட்டம் வழங்கப்பட்டது


No comments