மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா? இன்று தாண்டியடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து உடன் நிறுத்துமாறு கோரி, தாண்டியடி பிரதான வீதியில் இன்று (14) வெள்ளிக்கிழமை பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர் .
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தாண்டியடி பாடசாலை அருகில் பொதுமக்கள் பலவித சுலோகங்களுடன் கூடிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பாரிய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதனால் அப்பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் இன்று (14) வெள்ளிக்கிழமை திருக்கோவில் தாண்டியடியில் இடம்பெற்றது.
தாண்டியடி மற்றும் உயிரி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் உயிரி பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வதற்கான சாத்தியவளஅறிக்கை தயாரிப்பதற்காக இக்குழுவினர் வந்திருப்பதாக தகவல்கள் காட்டுத்தீபோல் பரவியது.
ஒருசில நிமிடங்களில் பொதுமக்களும் குவியத்தொடங்கினர்.
அதேவேளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ஆகியோரை எதிர்பார்த்த வண்ணம் மக்கள் நிற்கின்றனர்.
No comments