நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்ய திட்டம் !!
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யும் அதேவேளை, தபால் சேவைகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நுவரெலியா தபால் அலுவலகத்தை தபால் திணைக்களத்தின் கீழ் வைத்திருப்பதற்கும், அந்த இடத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யவதற்கும் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஒரு புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆனால் திருத்தப்பட்ட தீரமானத்தை அரசாங்கம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்காது.
இந்த திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் இருந்து தொழில்நுட்ப ஆலோசனை பெறப்படும்.
No comments