Vettri

Breaking News

காயத்திரி கிராமத்திற்கு குடிநீர் வசதி வழங்கும் வன்னிகோப்!!




 



( வி.ரி.சகாதேவராஜா)

வன்னி கோப் அமைப்பின் ஏற்பாட்டில் திருக்கோவில் -4         காயத்திரிபுரம் கிராமத்தில் குடிநீர் வசதியற்ற 25 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைவாக இவ் உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்   உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.அனோஜா உஷாந்த் , வன்னி கோப் அமைப்பின்  இனைப்பாளர் எஸ்.தர்மராஜா திருக்கோவில்--4 கிராம உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பயனாளர்கள்  என பலரும் கலந்துகொண்டனர்

No comments