Vettri

Breaking News

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் வைபகம்




 நூருல் ஹுதா உமர்


மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் வைபகம் அமைப்பின் தலைவர் ஏ.எம்.தஸ்மீன் தலைமையில் அமைப்பின் வளாகத்தில் (07) நடைபெற்றது.

இந்நிகழ்வின் மார்க்க சொற்பொழிவை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷ்இமாம் ஏ.எல்.எம்.மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ. பௌசர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை கிளையின் தலைவர் ஏ.எல்.எம். சலீம் (சர்க்கி) உட்பட உலமாக்கள், சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் எந்திரி எம்.எம்.எம். முனாஸ், மாளிகைக்காடு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், ஜும்மா பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், நம்பிக்கையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை நிர்வாகிகள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிர்வாகிகள், அங்கத்தவர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





No comments