Vettri

Breaking News

இந்த யானைகளை யாருமே கட்டுப்படுத்த மாட்டார்களா? யாருமே கவனிப்பதாயில்லை! பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகள் குரல்!




 ( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை கரையோரப் பகுதிகளில் அறுவடை நடைபெறும் சமகாலத்தில் யானைகளின் வருகை பலத்த சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

காரைதீவு நிந்தவூர் எல்லையில் உள்ள  அறுவடைக்கு தயாராக இருந்த இருவேறு விளைந்த வயல்கள் யானைகளின் அட்டகாசத்தால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நேற்று (07) நள்ளிரவில்  இடம்பெற்றுள்ளது.

நடுநிசியில்  புகுந்த யானை அங்கு சில நிமிடங்கள் அட்டகாசம் செய்தது. பின்னர் செல்லும் போது  சுமார் 4 ஏக்கர் வயல் காணிகளை துவம்சம் செய்து  வெளியேறியது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி எம்.ரவீந்திரன் ஊடகங்களுக்கு கூறுகையில்:

நேற்று நடுநிசியில் யானைகள் எமது அறுவடைக்கு தயாராக இருந்த இருவேறு விளைந்த வயல்களுக்குள் புகுந்து இந்த அட்டுழியத்தைச் செய்துள்ளது.

நான் அதிகாலையில்  இங்கு வந்துபார்த்தேன். இவை சேதமடைந்துள்ளன. எனது வயலும் அருகில் உள்ள குமாரின் வயலும் சேதமடைந்ததன
உரியவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.

இந்த யானைகளை கட்டுப்படுத்த மாட்டார்களா?  தினம் தினம் யானைகள் இவ்வாறு அட்டகாசம் செய்து வருகிறது. யாருமே கவனிப்பதாயில்லை.
ஏன் இது?

அரசாங்கம் பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன் நட்டஈட்டையும் தர
நடவடிக்கைஎடுக்கவேண்டும். என்றார்.

யானைகளால் வேளாண்மை அறுவடை முடிந்த பின்னர் அடிக்கடி இவ்வாறு சேதமேற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.




No comments