நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற காரைதீவு தமிழரசு வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்!
( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை தமிழரசுக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற
காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) காரைதீவில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவுக் கிளை, விவேகானந்த விளையாட்டு கழக தலைமையகத்தில் நடாத்திய இக் கூட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஜி. ஸ்ரீநேசன், டாக்டர் சி.ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக, அதிதிகளுக்கு காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் உரை நிகழ்த்தினர்.
இதன்போது வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் என்பன இடம்பெற்றன.
கூடவே பிரதான வேட்பாளர்கள் கி.ஜெயசிறில், யோ.கோபிகாந், சு.பாஸ்கரன், சி.சிவகுமார் மற்றும் ஏனைய வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments