சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அம்பரை மாவட்ட காரியாலயம் சாய்ந்தமருதில் திறந்து வைப்பு!
சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அம்பரை மாவட்ட காரியாலயம் (28.02.2025) வெள்ளிக்கிழமை அன்று உத்தியோகபூர்வமகாக சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக இலங்கைக்கான பொது பணிப்பாளர் திரு. துவான் ரிஸ்வான் காசிம் அவர்கள் கலந்து கொண்டதுடன். அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் விசேட அதிதிகளாக இலங்கைகான பொது செயலாளர் மனோஜ் சஞ்சீவ, கொழும்பு மாவட்ட பணிப்பாளர் கோசலா கஜானாயக,கண்டி மாவட்ட இளம் பணிப்பாளர் மஹ்மூத், சாய்ந்தமருது காவல்துறை பொறுப்பு அதிகாரி சம்ஸ்துதீன் மற்றும் சாய்ந்தமருது 06 பிரிவு கிராம சேவகர் திருமதி ஸஹ்னாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையதின் அம்பரை ஒருங்கிணைப்பாளர் அஸ்வர், செயலாளர் நிஷார்,Audior ஹிம்தாட், பொருளாளர் ரஷீட், உதவி செயலாளர் முஜீப் மற்றும் உறுப்பினர்களுக்கும் அம்பரை மாவட்ட பணிப்பாளர் திருமதி பைரூஷா நன்றிகளை தெரிவித்தார்.
No comments