Vettri

Breaking News

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் விஜயம்!




 திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு நேற்று (3) விஜயமொன்றை மேற்கொண்டார்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடிய போது, கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளின் ஊழியர் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற விடயங்களை அரசிடம் சுட்டிக்காட்டி தீர்வினை பெற்றுத்தருமாறு பணிப்பாளர் கேட்டிருந்தார்.


இதன்போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா ஆகியோர் உடனிருந்தனர்.









No comments