Vettri

Breaking News

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்ப வைத்தியர்!!!




 குடும்ப வைத்தியர் யோசனையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.


ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.


இதன் கீழ் கிராம அலுவலரின் 3 களங்களுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்பட்டு, அதற்கென தனி மையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.


இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



No comments