"இம்முறை புனித ரமழான் விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக நல்ல தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது" -பொறியலாளர் உதுமான்கண்டு நாபீர்!
பாறுக் ஷிஹான்
இலங்கையின் பல பகுதிளில் ஷவ்வால மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று 'ஈதுல் பித்ர்' நோன்புப்பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை புனித ரமழான், நாட்டுக்கு விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக நல்ல தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. நாட்டு மக்களும் குறிப்பாக சம்மாந்துறை மக்களும் அவர்களுக்கான சிறந்த தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள். அந்தவகையில் சம்மாந்துறை மக்களுக்கு எந்த கட்சியோ அமைப்புக்களோ செய்யாத பல்வேறு பணிகளை நாபீர் பௌண்டேசன் செய்துள்ளது என தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் ECM நிறுவனத்தின் தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.அவர் அனுப்பி வைத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ் வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்மீக ஈடேற்றத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மலரும் இப் புனிதப்பெருநாள் இம்மண்ணில் அமைதியையும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் சுமந்து வரவேண்டுமென பிரார்த்தின்றேன்.இந்த ரமழான் மாதம், நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வின் கலங்கரை விளக்கமாக இருப்பதோடு நம்மிடையே ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வளர்க்கிறது.
அல்குர்ஆன் எமது வாழ்க்கை வழிகாட்டி என்ற நிலையை எவருக்காகவும் நாம் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். மனிதத்தை வாழ வைக்கும் நீதியை நிலைநாட்டும் சகவாழ்வுக்கான போராட்டமே எம் வழிமுறை. எல்லாவற்றுக்கும் மேலாக இறைதிருப்தியே எமது இலக்காக இருக்கின்றது. இந்த உறுதியோடு இன்று எம்மை அச்சுறுத்தும் அசாதாரண சூழல், மனித உரிமை மீறல்கள், மத துவேஷங்கள், அத்துமீறல்கள் அனைத்தும் நீங்கி நம் நாடு எழுச்சி பெற இப்புனித நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திகின்றேன்.
வலிகளோடு கடந்து போகும் காஸா உறவுகளின் வாழ்வில் வெற்றியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தவல்ல ஆரம்பத்தை இப்புனித நாளில் எல்லாம் வல்ல அல்லாஹ் அமைக்க வேண்டும் என்றும் இரு கரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.ஈதுல் ஃபித்ர் பெருநாள் என்பது ஈகையினை அடிப்படையாகக் கொண்டதாகும். அந்தவகையில் ஒரு மாதகாலமாக அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, பசித்திருந்து, தாகித்திருந்து, புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்று, இரவு காலங்களில் நின்று வணங்கித் தமது கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று வெளிப்படுத்தும் நாம் எம்மைச் சுற்றியுள்ள ஏழை எளியவர்கள், தேவையுடையவர்களும் இத்திருநாளை நல்லமுறையில் கொண்டாடிட எம்மாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்து கொடுப்போம்.நாம் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், மனிதாபிமானம் ஆகியவற்றை பேணிச் செலுத்தி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும்
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நாம் நோற்ற நோன்புகளையும் எமது அமல்களையும் அங்கீகரித்து உயர்ந்த நற்கூலிகளைத் தந்தருள்வதோடு, ரமழானில் நாம் அடைந்த பக்குவத்தையும் அல்-குர்ஆனுடனான நெருக்கமான உறவையும் கொண்டு, உலக நாடுகளிலும் குறிப்பாக பலஸ்தீனிலும் அமைதி ஏற்பட்டு, எமது நாட்டிலும் ஒற்றுமையும் சகவாழ்வு மேலோங்க ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைவனின் கட்டளைகளுக்கு பணிந்து நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி இன்று ஈகைத்திருநாளாம் ஈதுல் பித்ர் புனித நோன்புப்பெருநாளைக்கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது இதயபூர்வமான புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் .
No comments