Vettri

Breaking News

சஜித் பிரேமதாசவின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீருடன் இணைவு!!




 பாறுக் ஷிஹான்


திகாமடுல்ல மாவட்டம்  முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமாகிய  எம்.எச்.எம். அல்இஹ்ஸான் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  புதிய கட்சியுடன் களமிறங்குவிருக்கும் சமூக செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீருடன்  இணைந்து கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தெர்லில் புதிய கட்சியுடன் களமிறங்குவிருக்கும் சமூக செயற்பாட்டாளரும் அரசியல்வாதிமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீரை  ஆதரித்து செவ்வாய்க்கிழமை(5) இரவு சம்மாந்துறையில் அமைந்துள்ள   காரியாலயத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த  திகாமடுல்ல மாவட்டம்  முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமாகிய  எம்.எச்.எம். அல்இஹ்ஸான்

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்பானவை.எனவே தான் இவ்வாறான மக்கள் சமூக சேவகனுக்கு எனது  ஆதரவினை பகிரங்கமாக தெரிவித்து கொண்டுள்ளேன்.பிரதேச அபிவிருத்தி இளைஞர்கள்  வேலைவாய்ப்பு  மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  புதிய கட்சியுடன் களமிறங்குவிருக்கும் சமூக செயற்பாட்டாளரும் அரசியல்வாதிமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீரின்   நல்ல முயற்சிகளுக்கு  தொடர்ந்தும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன்.

எமது பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை  எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் செய்ய முடியாத வேலைகளை  செய்து அழகு படுத்தியுள்ளார்.எனவே அனைத்து மக்களும் இம்மக்கள் சேவகனை எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஆதரிக்க  முன்வர  வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இந்நிகழ்வில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  புதிய கட்சியுடன் களமிறங்குவிருக்கும்  முக்கியஸ்தர்கள்  பிரதேச   இளைஞர்கள்  பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதே வேளை எதிர்வரும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவது தொடர்பான செயற்குழு கூட்டத்திலும் திகாமடுல்ல மாவட்டம்  முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமாகிய  எம்.எச்.எம். அல்இஹ்ஸான் கலந்து கொண்டார்.

பொறியியலாளரும்  சமூக செயற்பாட்டாளருமாகிய உதுமான்கண்டு நாபீரின்  அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  புதிய கட்சியில் அல்லது சுயேட்சை குழுவில் உள்ளுராட்சி தேர்தலில் களமிறங்குவது  தொடர்பாகவும் கட்சியின் செயற்பாட்டினை எவ்வாறு  விஸ்தரித்தல் மற்றும் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த ஏனைய கிழக்கு மாகாணத்தின்  திருக்கோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பாக வியூகங்களை அமைத்தல் தொடர்பில்  கலந்துரையாடப்பட்து.

இக்கலந்தரையாடலில்  கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல். துல்கர் நயீம் உட்பட    முன்னாள் சம்மாந்துறை நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





No comments