கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தேசிய மகளிர் வாரம்!!!
செ.துஜியந்தன்
இம்முறை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் தேசிய மகளிர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.2025 இல் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் இங்குள்ள மகளிர் சுய தொழில் குழுக்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவினால் தொழில் வழிகாட்டல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய இடங்களில் வினைத் திறன் மிக்க தொழிற்படையொன்று கெளரவமான தொழில் ஒன்று எனும் தொனிப்பொருளில் சலவைத்தூள், மாசிச்சம்பல் உட்பட சிறுதொழில் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. இப் பயிற்சி நெறியில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தனலெட்சுமி முரசொலிமாறன், மகளிர் அபிவிருத்தி கள உதவியாளர் யூ.றமீஸா, சிறுதொழில் அபிவிருத்தி முயற்சி பிரிவு உத்தியோகத்தர் எம்.ஐ.ரமீஸ் , விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.தர்சன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று பெரியநீலாவணையில் மகளிர் சுய தொழில் குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
No comments