ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்த ஆண்டின் வருமான இலக்குகளை அடைவது போன்ற விடயங்களை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
வரி சேகரிப்பில் செயல்திறன் மற்றும் நியாய போக்கு என்பவற்றை உறுதி செய்வதற்காக மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணைப்பது குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மதுபானம் மற்றும் புகையிலைத் தொழிற்துறையை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் அரச வருமானத்தை அதிகரித்தல், சட்டபூர்வமான வருமானத்தை உருவாக்குவதற்கு வசதிகளை வழங்குதல், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கக் கூடியவற்றை அமுல்படுத்தல், சட்டவிரோத மதுபானம், அபாயகர ஔடதங்கள் மற்றும் மனோவியல் ஓளடதங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர விழிப்புணர்வுத் திட்டங்களை செயல்படுத்துதல், தரமற்ற மதுபானங்களை அருந்துவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதை உறுதி செய்தல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு உதவுவதற்காக, நாட்டில் மதுபானம் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட மதுபானங்களை செயற்திறன் மிக்கதாகவும் பயனுள்ள முறையிலும் கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
No comments