கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திடீர் விஜயம்!
(நூருல் ஹுதா உமர், நிப்ராஸ் லத்தீப்)
தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை தக்க வைத்து தேசிய ரீதியாக மிளிரும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அஸ்ரப் தாஹிர் அவர்கள் இன்று (03) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள குறை, நிறைகளை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீம் அவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
அது மட்டுமல்லாமல் அங்கு பணிபுரியும் வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி, பிரதி கல்வி பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்களையும் சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடிய அவர் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கல்முனை கல்வி வலய கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
No comments