Vettri

Breaking News

சம்மாந்துறையில் இடம்பெற்ற நாபிர் பவுண்டேஷனின் வேட்பாளர் அறிமுகமும் இராப்போசன நிகழ்வும்!!




எதிர் வருகின்ற 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையில் நாபிர் பவுண்டேஷன் ஆதரவில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் சுயேட்சை குழு ஒன்று மாம்பழச் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்கின்ற நிகழ்வு சம்மாந்துறை ECM நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் (23) இப்தார் நிகழ்வுடன் நாபீர் பவுண்டேஷனின் அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல் துல்கர் நயீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மௌலவி எஸ்.எல். சபையிர் அவர்களால்  சமய அனுஷ்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில்  சம்மாந்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட 10 வட்டாரங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச சபையை மையமாகக் கொண்டு களம் இறங்கும் இத்தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையை கைப்பற்றுவது தொடர்பான அனைத்து வியூகங்கள் மற்றும் தேர்தலில் சட்டதிட்டங்கள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டதோடு சபையை வெற்றி கொள்வதற்கான எவ்வாறான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் இங்கு அரசியல் செயற்பாட்டாளர் சட்டத்தரணி துல்கர் நயீம் அவர்களால் உரையாற்றப்பட்டது. இப்தார் நிகழ்வு மற்றும்  இராப்போசனத்துடன் நிறைவு பெற்ற குறித்த இந்நிகழ்வில் ECM நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களின் பாரியார் எம் எல் சனாஷியா அவர்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.




No comments