Vettri

Breaking News

கூட்டுறவுச் சங்கத் தலைவர் திருநாவுக்கரசுவுக்கு பாராட்டு!




 ( வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத் தலைவராக கலாபூஷணம் மாசிலாமணி திருநாவுக்கரசு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

குருக்கள்மடத்தைச் சேர்ந்த கலாபூஷணம் மா.திருநாவுக்கரசு 36 ஆண்டுகளாக கூட்டுறவுச்சங்க கிளை முகாமையாளராக, வங்கிச் சேவை முகாமையாளராகப் பணியாற்றினார். 
மேலும் 13 ஆண்டுகளாகப் பணிப்பாளர் சபை உறுப்பினராகப் பணியாற்றினார். 
தற்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மொத்தத்தில் அருமையான, பெருமையான, அர்ப்பணிப்பான,ஆளுமையான சேவையால் கூட்டுறவுச் சங்கத்திற்காக உழைத்த திருநாவுக்கரசு பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

No comments