Vettri

Breaking News

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!!




 மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலிஎல, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவாபரணகம மற்றும் சொர்ணா தொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பகுதிக்கு நிலை 01 இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


No comments