Vettri

Breaking News

சாய்ந்தமருது பிளாஸ்டரின் சீருடை அறிமுகம், வீரர்கள் கௌரவிப்பு வர்ண இரவு !




 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழக சீருடை அறிமுகம், வீரர்கள் கௌரவிப்பு மற்றும் வர்ண இரவு கலை நிகழ்ச்சிகள் கழக செயலாளர் எம்.எல்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் கழகத் தலைவர் எம்.ஐ.எம். றிபாஜ் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஈ.சி.எம். நிறுவன தவிசாளரும், பிரபல சமூக சேவகருமான பொறியியலாளர் கலாநிதி யூ.கே. நாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி துல்ஹர் நயீன் துல்ஷான், மாற்றத்துக்கான முன்னணியின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ. ரைஸுல் ஹாதி, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை முன்னாள் உறுப்பினர் யூ.எல்.நூருல் ஹுதா, அல்- அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ. பரீட், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் ரீ.கே.எம். சிராஜ் உட்பட வர்த்தக பிரமுகர்கள், கல்விமான்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய புகழ்பெற்ற பிரபல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்ற இந்நிகழ்வில் மைதானத்தில் சிறந்த முறையில் தனது திறமையை வெளிகாட்டிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கழக நிர்வாகிகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது கழகத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான கழக சீருடையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.







No comments