சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது!!
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே மூன்றாவது தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, வருண் சக்கரவர்த்தி (2), குல்தீப் யாதவ் (2), இரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டரைல் மிற்செல் 63 (101), மிஷெல் பிறேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53 (40), றஷின் றவீந்திர 37 (29), கிளென் பிலிப்ஸ் 34 (52) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 252 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் 76 (83), ஷ்ரேயாஸ் ஐயரின் 48 (62), லோகேஷ் ராகுலின் ஆட்டமிழக்காத 34 (33), ஷுப்மன் கில்லின் 31 (50), அக்ஸர் பட்டேலின் 29 (40) ஓட்டங்களோடு 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், பிறேஸ்வெல் 2, அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 2, றவீந்திர மற்றும் கைல் ஜேமிஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக ஷர்மா தெரிவானார்.
No comments