இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி!!
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது.
கருத்தரிப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது.
செயற்கை முறை கருத்தரிப்புக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் விந்தணுக்களைச் சேகரித்து இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது.
இந்த விந்தணு வங்கியானது குழந்தையின்மையால் அவதிப்படும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
செயற்கை முறை கருத்தரிப்பு, கருத்தரிப்பின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாணல் , கருத்தரிக்க விரும்பும் பெண்கள் மற்றும் தம்பதிகளுக்காக உலகம் முழுவதும் விந்தணு வங்கிகள் பல காணப்படுகின்றன.
இந்த வசதி தற்போது இலங்கையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இந்த சேவைக்காக விந்தணுக்களை வழங்கும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்.
விந்தணுக்களை வழங்க விரும்பும் நபர்கள் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையின் சுகாதார துறையில் புதிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டும் வரும் நோக்கத்தில் இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது.
எனவே, ஒவ்வொரும் தங்களது விந்தணுக்களை வழங்கி இந்த முயற்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
No comments