Vettri

Breaking News

பெண்களின் வலிமையே நாட்டின் வலிமை - செந்தில் தொண்டமான் மகளிர் தின வாழ்த்து




 நூருல் ஹுதா உமர்


இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு  முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  தலைவர் செந்தில் தொண்டமான், அனைத்து துறைகளிலும் வெற்றி நடைபோடும் அனைத்து மகளிருக்கும் தன்னுடைய இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பெண் என்பவர் இந்த தேசத்தைக் கட்டியமைக்கும் வலிமை கொண்டவரகள். ஒரு குடும்பத்தை முன்னேற்றவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களின் பங்கு என்பது அளப்பறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படமிடத்து, பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் வழங்கப்படும் இடத்தில் இலங்கை காணப்படுகிறது என்றும் அதனால், அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும்  அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அனைத்துத் துறைகளிலும் மேலும்  சமஅந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர்,   இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்குதாரர்களாக பெருந்தோட்டப் பெண்கள் உள்ளனர் என்றும் அவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவது அவசியம் என்றும் தெரிவித்த அவர் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு இ.தொ.கா முன்நின்றுச் செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


No comments