எனது சமூக சேவைகளை தடுத்து நிறுத்த முயற்சிப்பது அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடே ; எதுவரினும் மக்களுக்கான எனது சேவை தொடரும் என்கிறார் பிரபல சமூக செயற்பாட்டாளர் சசிகுமார்!!
( வி.ரி.சகாதேவராஜா)
சில அரசியல் சக்திகளின் வங்குரோத்துத்தனத்தின் எதிரொலியாக எனது பல்வேறுபட்ட சமூக சேவை செயற்பாடுகளை தடுத்து நிறுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றார்கள். அது ஒருபோது முடியாது. மக்களுக்கான எனது பணி உயிருள்ளவரை தொடரும் .
இவ்வாறு திருக்கோவில் குட்நிக் விளையாட்டு மைதானத்தின் மீள் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார் .
இப் பாரிய அடிக்கல் நாட்டு நிகழ்வு குட்நிக் விளையாட்டு கழக செயலாளர் கே. பரமானந்தம் தலைமையில் இணைப்பாளர் தர்சனின் ஏற்பாட்டில் நேற்று (9)ஞாயிற்றுக்கிழமை மாலை பிரமாண்டமாக நடைபெற்றது .
சுமார் இரண்டாயிரம் மக்கள் கலந்து கொண்ட இவ் வைபவத்தில்,
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்,
தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ் குணபாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தார்கள் .
குட் நைட் விளையாட்டு மைதானத்திற்காக சமூக செயற்பாட்டாளர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் பல லட்சம் ரூபாய்களை வழங்கி வைத்திருக்கிறார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் ..
எதிர்வரும் நான்கு வருட காலத்தில் திருக்கோவில் பிரதேசத்தை வளமிக்க மண்ணாக அபிவிருத்தி செய்வதே எனது நோக்கமாகும். என்னுடன் மக்கள் ஒத்துழைத்தால் இங்கு பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க நான் தயாராக இருக்கின்றேன் . வீராவேசம் பேசிப்பேசி காலத்தை கடத்துகிறார்களே தவிர உருப்படியான எதனையும் இதுவரை செய்யவில்லை. எனது வருகையை பொறுத்து கொள்ள முடியாத சில அரசியல் சக்திகள் பல தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். என்னிடம் பாரிய திட்டங்கள் உள்ளன. அவற்றை மக்கள் ஒத்துழைப்புடன் அமுல் படுத்த தயாராக இருக்கின்றேன் என்றார்.
விழாவில், ஏலவே பல்கலைக்கழகம் சென்ற மாணவருக்கு மடிகணனியும், பல்கலைக்கழகம் செல்லும் இன்னும் பல மாணவர்களுக்கு உதவி தொகையும் அங்கு தொழிலதிபர் சசிகுமார் வழங்கி வைத்தார் .
குட்நிக் விளையாட்டு கழகத்தினர் தொழிலதிபர் சு.சசிகுமாருக்கு ஆளுயர மலர் மாலை சூட்டப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
விழாவில் மற்றும் ஒரு சமூக செயற்பாட்டாளர் பாஸ்கரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் இறுதியில் பாரிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
எனினும் எட்டு மணியளவில் சில அழுத்தங்களால் நிகழ்வு நிறுத்தப்பட்டது.
கடந்த சிலமாத காலத்துள் பல கோடி ரூபாய்களை மக்களுக்காக செலவுசெய்த தொழிலதிபர் சசிகுமாருக்கு மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கு உருவாகி வருவது
No comments