பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சிறப்புத் திட்டம் -பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ்!
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சிறப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இணையம் மற்றும் சமூக ஊடக தளங்களில் நிகழும் வன்முறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்தார்.
பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் வன்முறை, அடக்குமுறை, அவமதிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலை ஒன்லைனில் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு திட்டம் பல தரப்பினரின் ஈடுபாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
இந்த முயற்சிக்கு "அவர்களுடைய பயணத்தை ஆதரிப்போம்" (Let's Support Her Journey) என்று பெயரிடப்பட்டுள்ளது.
No comments