Home
/
இலங்கை செய்திகள்
/
பிரதான செய்திகள்
/
அம்பாறையில் புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களுக்கு நியமனம்!
அம்பாறையில் புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களுக்கு நியமனம்!
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் தாமதபட்டியலில் தெரிவான ஆறு புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களுக்கு பயிற்சிக்காக கடந்த 18 ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அந் நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அச்சமயம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தார்.
குறித்த ஆறு புதிய கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு கடந்த இரு வாரங்களாக
மாவட்ட செயலகத்தினால் பயிற்சி வழங்கப்பட்டது.
நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சியின் பின்னர் மேலதிக பயிற்சிக்காக 18.03.2025 முதல் தற்போது பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளன
ர்.
அதன் பின்னர் மூன்று மாதங்கள் அதே பிரதேச செயலாளர் பிரிவில் உயர் நிருவாக அதிகாரியின் கீழ் பயிற்சி பெற்றதன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
தாமதப் பட்டியலில் தெரிவான இந்த அறுவரும் ஆலையடிவேம்பு சம்மாந்துறை சாய்ந்தமருது லாகுகல தெஹியத்தகண்டிய உகன இறக்காமம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
அம்பாறையில் புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களுக்கு நியமனம்!
Reviewed by Thashaananth
on
3/21/2025 10:33:00 AM
Rating: 5

No comments