தேசபந்து தென்னகோன் தலைமையில் இயங்கிய குற்றவியல் வலையமைப்பு!!
தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
தென்னகோனின் கைது நடவடிக்கையை நிறுத்தக் கோரிய மனுவை விசாரித்தபோது,
கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளைப் பயன்படுத்தி வெலிகமவில் உள்ள ஹோட்டல் மீது தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டதாகக் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் கூறினார்.
ஒரு பொலிஸ் சார்ஜென்ட் மரணத்திற்கு வழிவகுத்த இந்த சம்பவம், தென்னகோனுக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுடன் தொடர்புடையது என்று பீரிஸ் கூறினார்.
தென்னகோன் தனிப்பட்ட மோதல்களைத் தீர்க்க பொலிஸாரை "துணை ராணுவப் படையாக" பயன்படுத்தியதாக பீரிஸ் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்
No comments