Vettri

Breaking News

முட்டையின் விலையைக் அதிகரிக்க வேண்டும் - முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை!!




 அண்மைக் காலமாக நாட்டில் முட்டையின் விலை குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் முட்டையின் விலையைக் குறைந்தபட்சம் 35 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments