ஏழு ஆண்டுகளின் பின் நடந்த பெண்கள் பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா! சாரதாமணி இல்லம் முதலிடம்! ( வி.ரி.சகாதேவராஜா)
சாரதாமணி இல்லம் முதலிடம்!
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையின்
97ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
ஏழு ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் யாவும் பாடசாலையின் அதிபர் ச.ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்வில் பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் ,
கௌரவ அதிதியான கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம்.ஜாபீர்
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் சாரதாமணி இல்லம் முதலிடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது.
அணி நடை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் பலரையும் கவர்ந்தன.
போட்டிகள் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments