வம்மியடியூற்று வாணிவித்தியாலத்தில் நாவலர் இல்லம் சம்பியன்!!
செ.துஜியந்தன்
போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்திற்குட்பட்ட வம்மியடியூற்று வாணிவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வித்தியாலய அதிபர் செ.தேவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து கொண்டார். விசேட அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரி.அருள்ராஜ் உட்பட ஆசிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், கிராம மட்ட அமைப்புக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பாரதி இல்லம் (சிவப்பு), விபுலானந்தர் இல்லம் ( பச்சை), நாவலர் இல்லம் (நீலம்) ஆகியன பங்குபற்றியது. இதில் இவ்வருடத்திற்குரிய சம்பியனாக நாவர் இல்லம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments