மு.கா பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களது ரமழான் வாழ்த்துச்செய்தி!!
இறையருளை அடைவதற்கான மாதம் ரமழான்.!
அல்லாஹ்வின் உதவியோடு ஹிஜ்ரி 1446 - ரமழான் மாதத்தை அடைந்திருக்கிறோம். இஸ்லாமிய மாதங்களில் சிறப்புமிக்க மாதங்களின் ஒன்றாகவும் இறையருளை அடைவதற்கான மாதமாகவும் புனித ரமழான் காணப்படுகிறது. உலகமெங்கும் வாழும் அனைத்து முஸ்லிம் உடன்பிறப்புக்களுக்கும் எனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நோன்பு என்பது உண்ணுவதையும் அருந்துவதையும் தவிர்க்கும் காலமல்ல; இது உள்ளம் மற்றும் செயல்களை பரிசுத்தப்படுத்தும் ஒரு ஒவ்வொரு முஃமீனின் ஆன்மீகப் பயணம் ஆகும். நாம் இந்த மாதத்தில் அன்பு, பொறுமை மற்றும் கருணையின் மூலம், சமூக நலனுக்காக பணியாற்றி, இறைவனின் நெருக்கத்தை அடைந்துகொள்ளவேண்டும்.
அதேபோல், நம்முடைய சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தி, சமூகத்திற்கு அன்பும், கருணையும், உதவியையும் வழங்குவதற்கான சந்தர்ப்பமாக நாம் இந்த மாதத்தை பயன்படுத்துத்தி அனைத்து இன மக்களோடும் ஒற்றுமையாக வாழ்வதோடு நமது உறவுகளையும் பலப்படுத்திக்கொள்வோம்.
கடந்தகாலங்களை போல் அல்லாமல் இம்முறை மிகவும் சுதந்திரமாவும் பாதுகாப்பாகவும் எங்களது நோன்பு கடமைகளையும் இரவு வணங்கங்களையும் மேற்கொள்ள இறைவன் துணைபுரிய வேண்டும் என பிரார்த்திப்பதோடு, அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கும் நாம் பிராத்திப்போம்.
இப் புனித மாதத்தில் நோய்களில் இருந்து உடல், உள்ளம் விடுபட்டு, ஆன்மீக ஆரோக்கியம், அமைதி மற்றும் ஒற்றுமை நிறைந்ததாக எம் அனைவருக்கும் அமையட்டும் என பிராத்திப்பதோடு,
பூரண ஆரோக்கியத்தோடு அனைத்து நோன்புகளையும் நோன்பதற்கு
எம் அனைவருக்கும் இறைவன் அருளும் அன்பும் கிடைக்கவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
புனித ரமழான் வாழ்த்துகள்!
கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் (பா.உ)
பிரதித்தலைவர்,
No comments