திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற சுவாட் அமைப்பின் மகளிர் தின நிகழ்வு!!
ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சுவாட் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்றைய தினம் தம்பிலுவில் பகுதியில் அமைய பெற்றுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது....
குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளரும் திருக்கோவில் பிரதேச இணைப்பாளருமான திரு.பிறேமலதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது...
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் த.கஜேந்திரன் சுவாட் அமைப்பின் தலைவி திரு.கமலாதேவி அம்மனி அவர்களும் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி திரு.P.பத்மகுமார ஆகியோர் கலந்து கொண்டதுடன் இவ் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோத்தர் திரு.கலைவதனி ,உளவிய உத்தியோத்தர் பஸ்மியா திருக்கோவில் பொலிஸ் நிலை சிறுவர் மகளிர் பொறுப்பதிகாரி K.விஜிதா ஒய்வு நிலை கோட்டைக்கல்வி பணிப்பாளர் ரவீந்திரன் ,சமுர்த்தி முகாமையாளர் திரு.கண்ணதாசன் ஓய்வு நிலை கிராம சேவையாளர் இரா.இராசரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்...
மேலும் குறித்த நிகழ்வில் அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்....அதனை தொடர்ந்து மங்கவிளகேற்றல் மற்றும் இறைவணக்கம் என்பன இடம்பெற்று மாணவர்களின் கலை நிகழ்வுகளும் வரவேற்பு நடனமும் இடம்பெற்றதுடன் வரவேற்பு உரையினை சுவாட் அமைப்பின் திருக்கோவில் பிரதேச முகாமையாளர் K.கிருஷ்சிக்கா அவர்களின் நான் நிகழ்ந்தப்பட்டதுடன் தலைமை உரையினை பிரதேச இணைப்பாளர் பிறேமலதன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது...
அதனை தொடர்ந்து அதிதி உரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் அதிதிகளுக்கு நினைவு சின்னங்கள் சுவாட் அமைப்பினரால் வழங்கப்பட்டது...
No comments