சம்மாந்துறை பாலர் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு!!!
நூருல் ஹுதா உமர்
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு சம்மாந்துறை லயன்ஸ் கழக அனுசரணையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள ஒக்ஸ்போர்ட் முன்பள்ளி மாணவர்களுக்கான வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பாடசாலை பல் சிகிச்சையாளர் எப். ஸாஹிரா பேகம் அவர்களால் நடாத்தப்பட்டதுடன் பல் துலக்கும் முறை தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைலான் நளீம், பொது சுகாதார பரிசோதகர் என். தினேஷ், பொது சுகாதார மருத்துவ மாது நஜீம், உளவள ஆலோசகர் திருமதி எப். பர்ஸானா ஆகியோரும் உரையாற்றினார்கள். மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
No comments