( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் வலயத்திலுள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின்(தேசிய பாடசாலை) நுழைவாயிலின்(Entrance )முகப்பு தோற்றத்தினை மாற்றி அமைப்பதற்காக புதிய நுழைவாயிலுக்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று (10) திங்கட்கிழமை அதிபர் கே.கங்காதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதற்கு நிதியுதவி வழங்கிய பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தார் .
முன்னாள் அதிபர்கள் ஊர்ப் பிரமுகர்கள் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை நிர்வாகத்தினர்,என பலரும் கலந்து கொண்டனர்.
அத்தோடு ஆரம்ப வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கும்படி ஒரு தொகை பணமும் தொழிலதிபர் சசிகுமாரால் வழங்கிவைக்கப்பட்டது.
No comments