தென்கிழக்கு பல்கலைக்கழக மாகாணப்போட்டியில் கல்முனை பற்றிமா முதலிடம்!
( வி.ரி.சகாதேவராஜா)
தென்கிழக்கு பல்கலைகழகத்தினால் Finance Day 2025 நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நிதியியல் வினாவிடை போட்டியில் (Financial Quiz Competition), கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுச்சாதனை படைத்துள்ளது.
கல்லூரியைச் சேர்ந்த வர்த்தக பிரிவு மாணவர்களாகிய ஏசி.அன்ரோலினா, ஏ.ஜிரோன்ஸி,எஸ்.ஸ்ருதி, பி.கர்ஷனா ஆகியோர் கார்மேலியன் (CARMELIAN) அணி எனும் நாமத்துடன் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடினர்(Winner).
இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த பிரபல்யமான 30 பாடசாலைகள் பங்குபற்றியதுடன், இப் போட்டியானது ஆரம்பச்சுற்று, இறுதிச்சுற்று என இரு சுற்றுக்களை கொண்டிருந்தது.
இவ் இரு சுற்றுக்களிலும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவர்கள் முதலாவது இடத்தை பெற்று வெற்றியாளர் Winner ஆக தெரிவு செய்யப்பட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி மற்றும் பேராசிரியர் குழு ரூபா 25000 பணப்பரிசும் வெற்றிச்சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர்.
No comments