கட்டுப்பாட்டு விலைகளுக்கும் அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை !!
கட்டுப்பாட்டு விலைகளுக்கும் அதிகமாக கீரி சம்பா மற்றும் சம்பா அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்ற குற்றச்சாட்டின் பேரில் 5,500 க்கும் மேற்பட்ட கடைகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. சட்ட விதிமீறல்களுக்காக 4,070 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிணங்க கடந்த 12 புதன்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் விதிமுறைகளை மீறி அரிசி விற்பனை செய்த 1,555 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிக விலைக்கு அரிசி விற்ற குற்றச்சாட்டின் கீழ் 462 விற்பனையாளர்கள், விலைகளை காட்சிப்படுத்தத் தவறிய 1,004 வர்த்தகர்கள் மற்றும் அரிசியை பதுக்கி வைத்து விற்க மறுத்த 89 விற்பனையாளர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.
No comments