Home
/
இலங்கை செய்திகள்
/
பிரதான செய்திகள்
/
மனித பாவனைக்கு உகந்ததாக ஒவ்வாத 71கிலோ பாரை மீன் சிக்கியது!!
மனித பாவனைக்கு உகந்ததாக ஒவ்வாத 71கிலோ பாரை மீன் சிக்கியது!!
செ.துஜியந்தன்
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பொதுச் சந்தை அருகில் கல்முனை நோக்கி கொண்டு சென்று கொண்டிருந்த பிக்ரக வாகனம் ஓன்று களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். யோகேஸ்வரன் தலைமையில் வழி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டு பழுதடைந்த மனித பாவனைக்குகந்ததற்ற 71kg பாரை மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுவ ழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
ஓந்தாச்சிமடம் பிரதான வீதியூடாக மனித பாவனைக்கு ஒவ்வாத நிலையில் பழுதடைந்த நிலையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 17 பாரை மீன்கள் கைப்பற்றப்பட்டு களுவாஞ்சிகுடி நீதவான் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிக்கு 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 06 மாத கால கடூழிய சிறை தண்டனை மற்றும் 18000 /= தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இவ் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மனித பாவனைக்கு உகந்ததாக ஒவ்வாத 71கிலோ பாரை மீன் சிக்கியது!!
Reviewed by Thashaananth
on
3/06/2025 11:10:00 AM
Rating: 5

No comments